Posts

Showing posts with the label General Medcine

பெண்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும் சில முக்கிய நோய்கள்

Image
பொதுவாக ஆண்களும் பெண்களும் வெவ்வேறு உடல் அமைப்புகளைக் கொண்டுள்ளனர் மற்றும் ஆண்களை விட பெண்கள் அதிகப்படியான நோய்களால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். பெண்களுக்கு ஏற்படும் நோய்கள் ஆண்களுக்கு ஏற்படும் நோய்களிலிருந்து மிகவும் வேறுபட்டவை. பெண்களை பாதிக்கும் பொதுவான நோய்கள்: மார்பக புற்றுநோய் மார்பக புற்றுநோய் என்பது பொதுவாக பெண்களின் பாலூட்டி சுரப்பிகளில் இருந்து உருவாகும் ஒரு நோய் நிலை. இது உடலின் மற்ற பகுதிகளுக்கும் பரவும் ஆற்றல் கொண்டது. இந்த வகை புற்றுநோயானது மிகவும் தீவிரமான புற்றுநோயாகக் கருதப்படுகிறது மற்றும் இது உலகில்  பெரும்பாலான பெண்களை பாதிக்கிறது. இதய நோய்கள் பெண்களை பாதிக்கும் நோய்களில் இதய நோய் களே  முதலிடத்தில் உள்ளன. இது ஆண்களுக்கும் பொதுவான பிரச்சினை என்றாலும், பெரும்பாலான பெண்களே இதய நோய்களால் பாதிக்கப்படுகின்றனர். இனப்பெருக்கக் கோளாறுகள் பெண்களின் உடல்கள் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. பெண்களின் இனப்பெருக்கக் கோளாறுகள், மாதவிடாய் சுழற்சியில் ஏற்படும் சிறிய மாற்றங்கள் முதல் இனப்பெருக்க புற்றுநோய் வரை இருக்கலாம். பெரிய அபாயங்களைத் தவிர்க்

ஓருவர் மருத்துவமனையில் அனுமதிக்க படும்போது கவனிக்கப்பட வேண்டியவைகள்

Image
மருத்துவமனையில் ஒருவர் மருத்துவ கண்காணிப்பில் அனுமதிக்க படும்போது அவரோ அல்லது அவர் குடும்பத்தினரோ அவர்களின் அனுபவத்தை எளிதாக்க கீழ் கண்ட பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றவும். கடந்த கால  மருத்துவ வரலாற்றை மறைக்காதீர்கள் நீங்கள் கடந்த காலத்தில்  உட்கொண்ட மருந்துகள், நோய்கள், உணவு முறை மாற்றங்கள், போதை பழக்கங்கள் மற்றும் ஏற்கனவே இருக்கும் நிலைமைகள், ஏதேனும் உங்கள் உடல் நல மருத்துவ கவனிப்பில் மாற்றத்தை ஏற்படுத்தலாம். எனவே அதை  உங்கள் மருத்துவரிடம் சொல்லுங்கள், அதனால் அவர்கள் உங்களுக்கு சிறந்த சிகிச்சை திட்டத்தை உருவாக்கி தர  முடியும். உங்கள் சிகிச்சை  திட்டத்தை அறிந்து கொள்ளுங்கள் உங்கள் மருத்துவ பராமரிப்பு குழு உங்களுக்கு  பரிந்துரைக்கும் சிகிச்சை திட்டம் - சோதனைகள், மருந்துகள், நடைமுறைகள் மற்றும் அவற்றுக்கான காரணங்கள் பற்றி நீங்கள் தெளிவாக அறிந்து கொள்வது அவசியம். எந்த நேரத்திலும் கேள்விகளைக் கேட்க தயங்காதீர்கள். அன்புக்குரியவரின் உதவியைப் பெறுங்கள் உங்கள் குடும்ப உறுப்பினர் - பெற்றோர், மனைவி, அல்லது வயது வந்த உங்கள் மகன் அல்லது மகள்யை உங்களுடன் மருத்துவ அறையில் தங்கவைத்துக் கொள்ளுங்கள்.