Posts

Showing posts with the label Paediatrics

புதிதாகப் பிறந்த குழந்தையைப் ஆரோக்கியமாக பராமரிக்க சிறந்த வழிகள்

Image
புதிதாகப் பிறந்த உங்கள் குழந்தையை ஆரோக்கியமாக பராமரிக்க,  குழந்தை வளர்ப்பில் சிறந்த நடைமுறைகளை பற்றி பெற்றோர் தெரிந்து வைத்திருப்பது அவசியம். புதிதாகப் பிறந்த குழந்தைக்கு அடிக்கடி தாய்ப்பால் கொடுங்கள் - ஒவ்வொரு 2-3 மணி நேரத்திற்கும் ஒருமுறை கொடுங்கள். குழந்தையின் வளர்ச்சிக்கு  தாய்ப்பால்  இன்றியமையாதது. தாய்ப்பால் கொடுத்த பிறகு, உங்கள் குழந்தை ஏப்பம் விடுவதை  உறுதி செய்யவும். உணவளிக்கும் போது, ​​குழந்தைகள் காற்றையும் உணவுடன் விழுங்குகிறார்கள், இது அவர்களின் வயிற்றில் பெருங்குடல் பகுதியில் வாயுவை ஏற்படுத்தலாம். உங்கள் குழந்தையை படுக்கையில் அல்லது தொட்டிலில் சுமத்தும் போது அல்லது வைக்கும் போது, ​​எப்போதும் தலை மற்றும் கழுத்தை கவனமாக  கையாளவும்.  ஒவ்வொரு முறையும் டயப்பரிங் (Diapering) செய்யும் போது, ​​வெதுவெதுப்பான நீர், பருத்தி ஆடைகளை பயன்படுத்துங்கள் மற்றும் உங்கள் குழந்தையின் பிறப்புறுப்பு பகுதியை சுத்தம் செய்ய பேபி துடைப்பான்களை(Baby wipes) பயன்படுத்தலாம். ஒரு நாளின் சில மணிநேரங்களுக்கு, உங்கள் குழந்தையை டயாபர்  அணியாமல் விட்டு விடுங்கள், இதனால் அந்த இடத்தில் தோல் சற்று ஆரோக்கியமாக சு

குழந்தைகளுக்கு ஏற்படும் மன அழுத்தத்தைத் தடுக்க சில வழிகள்

Image
குழந்தைப் பருவம் என்பது மகிழ்ச்சி மற்றும் விளையாட்டுகள் மட்டும் நிறைந்தது அல்ல. குறிப்பிட்ட  வயதுக்கு மேல் பள்ளிப் படிப்பு மற்றும் பிற சூழ்நிலை காரணிகளால் ஏற்படும் மன அழுத்தத்தை குழந்தைகள்  அனுபவிக்கக்கூடும். ஒரு பெற்றோராக, குழந்தைகளின் மன அழுத்தத்தை ஆரோக்கியமாகச் சமாளிக்க உங்கள் பிள்ளைக்கு நீங்கள் உதவலாம். குழந்தைகளின் மன அழுத்தத்தைத் தடுக்க சில வழிகள் உங்கள் குழந்தைகள்  பேசுவதை  பொறுமையாகவும் கவனமாகவும் கேளுங்கள். உணர்வு ரீதியிலான உங்கள் தொடர்பு முக்கியமானது மற்றும் மன அழுத்தத்தைத் தடுப்பதில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. மன அழுத்தத்தைத் தூண்டும் சூழ்நிலையை எதிர்கொள்ள உங்கள் பிள்ளைக்குக் கற்றுக் கொடுங்கள். உங்கள் குழந்தைகளுக்கு தேவை அல்லாத அதிகமான செயல்பாடுகள் மற்றும் அதிக சுமைகள் இல்லாமல் பார்த்துக்கொள்ளவும். எப்பொழுதும் ஆதரவாக இருங்கள் மற்றும் சமயங்களில்  தவறுகளை சுட்டிக்காட்டுங்கள். இருப்பினும், சிறு செயல்களினும் அடிக்கடி சரி தவறுகளை சுட்டிக்காட்டாதீர்கள். அவர்களின் தவறுகளுக்கு ஒவ்வொன்றாக சிறிது கால இடைவெளியில்   தீர்வு காணவும். அன்பையும் அரவணைப்பையும் காட்டுங்கள், உங்கள் குழந