குழந்தைகளுக்கு ஏற்படும் மன அழுத்தத்தைத் தடுக்க சில வழிகள்

குழந்தைப் பருவம் என்பது மகிழ்ச்சி மற்றும் விளையாட்டுகள் மட்டும் நிறைந்தது அல்ல. குறிப்பிட்ட  வயதுக்கு மேல் பள்ளிப் படிப்பு மற்றும் பிற சூழ்நிலை காரணிகளால் ஏற்படும் மன அழுத்தத்தை குழந்தைகள்  அனுபவிக்கக்கூடும். ஒரு பெற்றோராக, குழந்தைகளின் மன அழுத்தத்தை ஆரோக்கியமாகச் சமாளிக்க உங்கள் பிள்ளைக்கு நீங்கள் உதவலாம்.



குழந்தைகளின் மன அழுத்தத்தைத் தடுக்க சில வழிகள்

  • உங்கள் குழந்தைகள்  பேசுவதை  பொறுமையாகவும் கவனமாகவும் கேளுங்கள். உணர்வு ரீதியிலான உங்கள் தொடர்பு முக்கியமானது மற்றும் மன அழுத்தத்தைத் தடுப்பதில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது.
  • மன அழுத்தத்தைத் தூண்டும் சூழ்நிலையை எதிர்கொள்ள உங்கள் பிள்ளைக்குக் கற்றுக் கொடுங்கள்.
  • உங்கள் குழந்தைகளுக்கு தேவை அல்லாத அதிகமான செயல்பாடுகள் மற்றும் அதிக சுமைகள் இல்லாமல் பார்த்துக்கொள்ளவும்.
  • எப்பொழுதும் ஆதரவாக இருங்கள் மற்றும் சமயங்களில்  தவறுகளை சுட்டிக்காட்டுங்கள்.
  • இருப்பினும், சிறு செயல்களினும் அடிக்கடி சரி தவறுகளை சுட்டிக்காட்டாதீர்கள்.
  • அவர்களின் தவறுகளுக்கு ஒவ்வொன்றாக சிறிது கால இடைவெளியில்   தீர்வு காணவும்.
  • அன்பையும் அரவணைப்பையும் காட்டுங்கள், உங்கள் குழந்தையை அடிக்கடி கட்டி அணையுங்கள்.
  • உங்கள் குழந்தையுடன் அதிக நேரம் செலவிடுங்கள். இது உங்கள் குழந்தை பாதுகாப்பாக உணர வைக்கிறது.
  • விமர்சனத்தில் கவனம் செலுத்தாமல், நேர்மறையானவற்றில் கவனம் செலுத்த உங்கள் பிள்ளைக்கு உதவுங்கள்.
  • உங்கள் குழந்தைகளை  விளையாட்டுகள், ஓவியம், தியானம், யோகா போன்ற மன அழுத்த தளர்வு வழிகளுக்கு பழக்கபடுத்துங்கள்.
  • உங்கள் குழந்தை தைரியமாக ஏதாவது செய்தால் வெகுமதியும்  பாராட்டையும் பரிசளியுங்கள்.
  • குழந்தைகளுக்கான கணிசமான அளவு கற்றல் அவர்களின் பெற்றோரிடமிருந்து வருகிறது. எனவே, நீங்கள் மன அழுத்தத்தை எதிர்கொள்ளும் போது, ​​அதை நிதானமாக கையாளுங்கள்.
  • நல்ல தூக்கம் மற்றும் உணவுப் பழக்கங்களை ஊக்குவிக்கவும்.
  • மன அழுத்தத்தின் ஆதாரம் அடிக்கடி அவ்வப்போது மாறுகிறது. உங்கள் குழந்தையை மன அழுத்தத்திலிருந்து பாதுகாக்க முடியாமல் போகலாம். ஆனால் ஆரோக்கியமான சமாளிக்கும் அணுகுமுறைகளை வழங்குவது நீண்ட காலத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்.

Comments

Popular posts from this blog

நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்கும் மூன்று உணவுகள்

Eczema - ஐந்து எச்சரிக்கை அறிகுறிகள்

நுரையீரல் அடைப்பு நோயை தடுக்கும் சிறப்பு நடவடிக்கைகள்