Posts

Showing posts from September, 2022

ஒற்றைத் தலைவலியைப் போக்க நான்கு எளிய வழிமுறைகள்

Image
ஒற்றைத் தலைவலி (Migraine) மிகவும் கடுமையானது, இது கடுமையான காயம் அல்லது மன அதிர்ச்சியை காட்டிலும் குறைந்தது இல்லை. ஒற்றைத் தலைவலியைக் குறைப்பதில் இன்றைய மருந்துகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தாலும், சமநிலையான ஆரோக்கியமான வாழ்க்கை முறை ஒற்றைத் தலைவலியை நிர்வகிக்கவும், குறைக்கவும் சிறந்த வழிமுறை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஒற்றைத் தலைவலியை சமாளிக்க மிகவும் பயனுள்ள நான்கு வழிமுறைகள் இங்கே. அமைதியாக இருங்கள் என்றும் அமைதியான மனநிலையுடன் இருங்கள், ஒற்றைத் தலைவலியின் முதல் அறிகுறியை நீங்கள் கவனித்தவுடன், விலகிச் சென்று ஓய்வெடுக்க வசதியான இடத்தைக் கண்டறியவும். நீங்கள் அமைதியாக தூங்கக்கூடிய இருண்ட மற்றும் அமைதியான அறையை தேர்ந்தெடுங்கள். உங்கள் தசைகளை தளர்த்துவதற்கு வெது வெதுபான நீரில் குளியல் அல்லது வெப்பமூட்டும் பட்டைகள் (Heating Pads) உதவுகின்றன. கழுத்து மற்றும் தலையில் ஐஸ் கட்டிகளைப் பயன்படுத்தி குளிர்ச்சியான அழுத்தம் தருவதால் அந்த பகுதிகளை நல்ல தளர்வான உணர்ச்சியை பெறலாம். இதனால் தலைவலியை குறைவாக உணர்வீர்கள். நன்றாக சாப்பிட்டு தூங்குங்கள் தூக்கமின்மை ஒற்றைத் தலைவலியின் பொதுவான காரணம். இர