பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒருவரைப் பராமரிப்பதற்கான விரைவான வழிகாட்டி
பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்து திரும்பிய ஓருவரை எப்படி மேம்படுத்துவது என்பதை பற்றிய விரைவான வழிகாட்டி:
- நோயாளின் அன்றாட வாழ்வில் நல்ல உணர்ச்சிகளில் கவனம் செலுத்துங்கள், குறிப்பாக அவர்களின் மனச்சோர்வின் அறிகுறிகளைக் கண்காணிக்கவும். ஏனெனில், பக்கவாதம் மன உளைச்சலுக்கு வழிவகுக்கும்.
- ஆரோக்கியமான மற்றும் குறைந்த கொழுப்பு உணவுகளை தயாரிப்புகளை தயார் செய்து கொடுக்கவும்.
- மற்றொரு பக்கவாதத்தைத் தூண்டக்கூடிய ஆபத்துக் காரணிகளைப் பற்றி நீங்கள் கற்றுக் கொள்வது அவசியம்.
- சுகாதார வலைப்பதிவுகள் மற்றும் கட்டுரைகளைப் படிக்கவும்.
- உங்கள் வீடு மற்றும் சுற்றுச்சூழலை புகையிலிருந்து பாதுகாக்கவும்.
- பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் சமநிலை தவறி தவறுதலாக கீழே விழ வாய்ப்பு உள்ளது. எனவே கிராப்-பார்கள் (grab-bars), ஆண்டி-ஸ்லிப் பாய்களை (anti-slip mats) நிறுவவும்.
- பக்கவாதம் தற்காலிக அல்லது நிரந்தர மோட்டார் குறைபாடுகளை ஏற்படுத்தும் என்பதால், உடல் இயக்கத்தை மேம்படுத்த வழக்கமான உடற்பயிற்சியை ஊக்குவிக்கவும்.
- நபரை மகிழ்ச்சியாக வைத்திருக்க முயற்சி செய்யுங்கள். உங்கள் அன்புக்குரியவரின் விருப்பமான திரைப்படங்கள் அல்லது இசையை ரசிக்க வைக்கலாம்.
- உங்கள் அன்புக்குரியவர் மருந்துகளை உட்கொள்கிறார் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
- மருத்துவருடன் தொடர் சந்திப்புகளுக்கான நினைவூட்டல்களை வைத்திருங்கள்.
- மருத்துவரை சந்திப்பதற்கு முன் உங்கள் எல்லா கேள்விகளையும் கவனித்து தயார்செய்து கொள்ளுங்கள்.
- உங்கள் அன்புக்குரியவருக்கு பராமரிப்பாளராக இருப்பது ஒரு பெரிய பொறுப்பாகும்.
Comments
Post a Comment