IVF சிகிச்சைக்கு முன் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள்

ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பது என்பது ஒவ்வொரு பெற்றோரின் கனவு. அதை அறிவியல் மூலம் சாத்தியப்பட வைப்பது  ஒரு அசாதாரண முயற்சி. IVF தொடர்பான சிகிச்சைகள் ஆகியவற்றில் பல வருடங்களாக  பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன, இதனால் கர்ப்பம்  தரிக்க இயலாத ஏராளமான பெண்களுக்கும் இப்போது கர்ப்பம் அடையக்கூடியதாக வாய்ப்பும் நிறைய ஏற்பட்டுள்ளது.

IVF நிறைய நேரம் எடுக்கும்

எந்த எந்த மருந்துகளுக்கு உங்கள் உடல் எவ்வளவு விரைவாக பதிலளிக்கிறது என்பதைப் பொறுத்து, IVF ன் ஒரு  முழு சுற்று பொதுவாக நான்கு வாரங்கள் முதல் இரண்டு மாதங்கள் வரை நீடிக்கும். அந்த நேரத்தில், நீங்கள் பல மருத்துவ பரிசோதனைகள் மற்றும் அது தொடர்பான  பணிகளை முடிக்க வேண்டும்.

சுழற்சி முழுவதும் நேர்மறையாக இருத்தல்

வெற்றியை அடையும் வரை / ஒரு குழந்தையைப் பெறும் வரை, ஒரு நேர்மறையான எண்ணங்களுடன் தங்கள் இலக்கைத் தொடர அந்த தம்பதி ஒப்புக் கொள்ள வேண்டும். தங்கள் இலக்கு சாத்தியமானது என்று உணர வேண்டும் மற்றும் எப்போதும் மாற்றங்களுக்கு தயாராக இருக்க வேண்டும்.

ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பராமரித்தல்

கருவுறுதலின் ரகசியம் ஆரோக்கியமான எடையை பராமரிப்பதாகும். கருத்தரிப்பதற்கும் கர்ப்பத்தை அடைவதற்கும், ஒரு சீரான உணவு பழக்கத்தை பின்பற்ற வேண்டும், ஆண்கள் மற்றும் பெண்களின் கருவுறுதலை அதிகரிக்கும் உணவுகளை உட்கொள்ள வேண்டும், வழக்கமான உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்.

Comments

Popular posts from this blog

நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்கும் மூன்று உணவுகள்

Eczema - ஐந்து எச்சரிக்கை அறிகுறிகள்

புதிதாகப் பிறந்த குழந்தையைப் ஆரோக்கியமாக பராமரிக்க சிறந்த வழிகள்