நம் வாய் ஆரோக்கியத்தை பராமரிக்க 7 பரிந்துரைகள்

ஒரு மனிதரின் உடலில் உள்ள ஒவ்வொரு பாகத்தின் ஆரோக்கியத்துக்கும் அவரின் வாய் முக்கிய பங்கு வகிக்கிறது. சுகாதரமில்லாத வாய் மற்றும் நாக்கு பகுதி பல்வேறு வகையான நோய்களுக்கு வழிவகுக்கும். நல்ல வாய் சுகாதாரத்தை பராமரிக்க சில வழிகள் உள்ளன.

இரண்டு முறை பல் துலக்குதல்


மென்மையான முட்கள் கொண்ட தூரிகை (Brush) மூலம் இரண்டு முறை பல் துலக்குதல் எப்போதும் நன்மை பயக்கும். இது பற்களில் இருந்து தேவையற்ற கசடுகளை அகற்ற உதவுகிறது, மேலும் ஈறுகளில் பரவுவதை தடுக்கிறது.


பல்நாடா(Floss) பயன்படுத்துங்கள்


நீங்கள் பல் துலக்கினாலும், உங்கள் பற்களுக்கு இடையே உள்ள கசடுகள் அகற்றப்படவேண்டும் . அத்தகைய ஆழமான மூலைகளிலிருந்து பிளேக்கை அகற்ற பல்நாடா மட்டுமே வழி.


சிற்றுண்டி சாப்பிடுவதைத் தவிர்க்கவும்


அடிக்கடி சிற்றுண்டி சாப்பிடுவது வாயில் பிளேக்களை படிய செய்யும். தின்பண்டங்களின்  பிளேக் அமிலத்திற்கு வழிவகுக்கும், இது பற்களை சேதமடையச் செய்யும்.


பிரஷ்(Brush)-யை சரியான இடைவெளியில் மாற்றுங்கள்


பல் துலக்கும் பிரஷ்-ம் மற்ற தயாரிப்புகளைப் போன்றது, இது காலப்போக்கில் தேய்வடையலாம். நல்ல பிரஷ்யில் துலக்கினால் மட்டுமே பற்களை சுத்தம் செய்ய முடியும்.


புகைபிடிப்பதை நிறுத்துங்கள்


புகைபிடித்தல் என்பது ஈறு பிரச்சனைகளுக்கு மிகவும் முக்கிய காரணிகளில் ஒன்றாகும். புகைபிடித்தல் பற்களின் ஆரோக்கியதை  எளிதில் அழித்துவிடும்.


மவுத் வாஷை(Mouth wash) பயன்படுத்தலாம்


அடிக்கடி துலக்குதல் மற்றும் பல்நாடா வை பயன்படுத்துவது நன்மை பயக்கும், ஆனால் உங்கள் வழக்கத்தில் மவுத்வாஷைச் சேர்ப்பதும் முக்கியம், இது நுண்ணுயிர் வளர்ச்சியின் அபாயத்தைக் குறைக்கிறது.


பல் மருத்துவரைப் பார்வையிடவும்


பரிசோதனைகள் மற்றும் பற்க்களை  சுத்தம் செய்வதற்கு உங்கள் பல் மருத்துவரைச் சந்திப்பது முக்கியம். சரியான பல் மருத்துவ கண்காணிப்புகள் நல்ல வாய்வழி சுகாதாரத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்.


எந்தவொரு கிருமித் தாக்குதலிலிருந்தும் உங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க, நீங்கள் நல்ல வாய்வழி சுகாதாரத்தை பராமரிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


Comments

Popular posts from this blog

நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்கும் மூன்று உணவுகள்

Eczema - ஐந்து எச்சரிக்கை அறிகுறிகள்

நுரையீரல் அடைப்பு நோயை தடுக்கும் சிறப்பு நடவடிக்கைகள்